ஸூரா 31: லுக்மான் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 8:20
ஸூரா 31: லுக்மான்
[31:1] அ.ல.ம.*
[31:2] (எழுத்துக்களாகிய) இவை ஞானம் நிறைந்த இப்புத்தகத்தின் சான்றுகளாக அமைகின்றன.
[31:3] நன்னெறியாளர்களுக்கு ஒரு வழிகாட்டியும் மேலும் ஒரு கருணையுமாகும்.
[31:4] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.
[31:5] அவர்கள் தங்கள் இரட்சகரிடமிருந்து வந்த வழிகாட்டலைப் பின்பற்றுகின்றனர், மேலும் அவர்களே வெற்றியாளர்கள்.
[31:6] மனிதர்கள் மத்தியில், அடிப்படையற்ற ஹதீஸ்களை, விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர், மேலும் இவ்விதமாக அறிவின்றி மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திருப்புகின்றனர், மேலும் அதனை வீணாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு இவர்கள் உள்ளாகி விட்டனர்.
[31:7] மேலும் அவர்களில் ஒருவனுக்கு நமது வெளிப் பாடுகள் ஓதிக்காட்டப்படும் போது, அவற்றை அவன் ஒருபோதும் கேளாததைப் போலவும் அவனது காதுகள் செவிடானதைப் போலவும், ஆணவத்துடன் அவன் திரும்பிச் சென்று விடுகின்றான். வலிநிறைந்ததொரு தண்டனை யை அவனுக்கு வாக்களிப்பீராக.
