ஸூரா 44: புகை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 5:39
ஸூரா 44: புகை
[44:1] ஹா.ம.
[44:2] மேலும் ஞானம் உபதேசிக்கின்ற இவ்வேதம்.
[44:3] பாக்கியமிக்கதொரு இரவில் இதனை நாம் இறக்கி அனுப்பினோம், ஏனெனில் நாம் எச்சரிப் பவர்களாக இருக்கின்றோம்.
[44:4] (வேதமான) இதிலே, ஞானத்தின் ஒவ்வொரு விஷயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
[44:5] நாம் தூதர்களை அனுப்புவோம் என்பது நம்மிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொரு கட்டளையாக உள்ளது.
[44:6] இது உம் இரட்சகரிடமிருந்து ஒரு கருணையாகும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[44:7] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர். நீங்கள் மட்டும் உறுதியுடையவர்களாக இருக்க முடிந்தால்!
