ஸூரா 73: அங்கி அணிந்தவர் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 3:10
ஸூரா 73: அங்கி அணிந்தவர்
[73:1] அங்கி அணிந்தவரே.
[73:2] அரிதாகவே தவிர, இரவுப் பொழுதுகளில் தியானிப்பீராக.
[73:3] அதன் பாதி, அல்லது சற்றுக் குறைவாக.
[73:4] அல்லது சற்று அதிகமாக. மேலும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை இக்குர்ஆனைப் படிப்பீராக.
[73:5] நாம் உமக்கு ஒரு கனமான தூதுச் செய்தியைத் தருவோம்.
[73:6] இரவினில் தியானிப்பதானது அதிக நற்பலன ளிப்பது, மேலும் மிகவும் நன்னெறியானது.
[73:7] மற்ற விஷயங்களுக்கு பகற்பொழுதில் உமக்கு ஏராளமான நேரம் உள்ளது.
