ஸூரா 71: நோ — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 3:20
ஸூரா 71: நோ
[71:1] நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: “வலி நிறைந்ததொரு தண்ட னை அவர்களை துன்புறுத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்”.
[71:2] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப் பவராக இருக்கின்றேன்.
[71:3] “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.
[71:4] “அப்போது அவர் உங்களை உங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவார், மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத் திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், மிகவும் நிச்சயமாக, கடவுள்-ன் நியமனமானது, அதற் குரிய நேரம் வந்துவிட்டவுடன், ஒருபோதும் தாம திக்கப்பட இயலாது”.
[71:5] அவர் கூறினார், “என் இரட்சகரே, இரவும் பகலும் என் சமூகத்தாரை நான் அழைத்து விட் டேன்.
[71:6] “ஆனால் என்னுடைய அழைப்பு அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தது.
[71:7] “உம்மால் மன்னிக்கப்படுவதற்காக அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம், அவர்கள் தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல் களை வைத்துக் கொண்டனர், தங்களுடைய ஆடைகளினால் தங்களை மூடிக் கொண்டனர், பிடிவாதம் செய்தனர், மேலும் ஆணவம் கொண்டவர்களாயினர்.
