ஸூரா 14: ஆப்ரஹாம் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 13:39
ஸூரா 14: ஆப்ரஹாம்
[14:1] அ.ல.ர.* சர்வ வல்லமையுடைய, புகழுக்குரிய வரின் பாதையை நோக்கி-அவர்களுடைய இரட்சகரின் நாட்டத்திற்க்கு இணங்க-மக்களை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக, உமக்கு நாம் வெளிப் படுத்திய ஒரு வேதம்.
[14:2] கடவுள்(உடைய பாதை); வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் சொந்தமாகக் கொண்டிருக்கும் ஒருவர். நம்ப மறுப்பவர்களுக்குக் கேடுதான்; அவர்கள் ஒரு பயங்கரமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[14:3] அவர்கள் மறுவுலகை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள், மேலும் அதனைக் கோணலாக்க முயலுபவர் கள்; அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டனர்.
[14:4] விஷயங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு, (உபதேசம் செய்வதற்காக) அவருடைய சமூகத்தாரின் மொழியிலேயே அன்றி, எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. பின்னர் தான் நாடுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் தான் நாடுவோரை வழிநடத்துகின்றார். அவர் சர்வ வல்லமையுடையவராகவும், ஞானம் மிக்கவராகவும் இருக்கின்றார்.
[14:5] இவ்வாறே, “உம்முடைய சமூகத்தாரை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியினுள்ளே வழி நடத்துவீராக, மேலும் கடவுள்-ன் நாட்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக” எனக் கூறியவாறு, மோஸஸை நம்முடைய அற்புதங் களுடன் நாம் அனுப்பினோம். உறுதியோடும், நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இவை படிப்பினைகள் ஆகும்.
[14:6] மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகன்களைக் கொன்று உங்கள் மகள்களை உயிரோடு விட்டு வைத்து, உங்கள் மீது மோசமான அடக்குமுறையைச் சுமத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து அவர் உங்களைக் காப்பாற்றினார். அது உங்கள் இரட்சகரிடமிருந்து ஒரு கடினமான சோதனை யாக இருந்தது” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[14:7] உமது இரட்சகர்: “நீங்கள் எனக்கு எவ்வளவுக் கெவ்வளவு நன்றி செலுத்துகின்றீர்களோ, நான் உங்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு தருவேன்” என்று கட்டளையிட்டுள்ளார். ஆனால் நீங்கள் நன்றியற்றவர்களாக மாறி விட்டால், பின்னர் எனது தண்டனை கடுமையானதாகும்.
