ஸூரா 83: ஏமாற்றுபவர்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 2:49
ஸூரா 83: ஏமாற்றுபவர்கள்
[83:1] ஏமாற்றுபவர்களுக்குக் கேடுதான்.
[83:2] அவர்கள் மக்களிடமிருந்து பெறும்பொழுது முழு அளவையும் உரிமையுடன் கேட்கின்றனர்.
[83:3] ஆனால் அவர்களுக்கு அளவுகளையோ அல்லது எடைகளையோ தரும்பொழுது, அவர்கள் ஏமாற்றுகின்றனர்.
[83:4] தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா?
[83:5] பயங்கரமானதொரு நாளன்று?
[83:6] அதுதான் மனிதர்கள் அனைவரும் பிரபஞ் சத்தின் இரட்சகரின் முன்னால் நிற்கப் போகின்ற நாளாகும்.
[83:7] உண்மையில், தீயவர்களின் புத்தகமானது, ஸிஜ்ஜீனில் இருக்கின்றது.
