ஸூரா 35: துவக்குபவர் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 13:39
ஸூரா 35: துவக்குபவர்
[35:1] புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர், மேலும் சிறகுகள்- இரண்டு, மூன்று, மற்றும் நான்கு (சிறகுகள்) கொண்ட தூதர்களாக வானவர்களை நியமிப்பவர். அவர் நாடுகின்றவாறு படைப்புகளை அவர் அதிகரிக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[35:2] மக்கள் மீது கடவுள் அருளைக்கொண்டு பொழியும் பொழுது, எந்தச் சக்தியும் அதனைத் தடுத்திட முடியாது. மேலும் அவர் அதனைத் தடுத்து நிறுத்திக் கொண்டால், எந்தச் சக்தியும், அவரைத் தவிர, அதனை அனுப்ப முடியாது, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[35:3] மனிதர்களே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். கடவுள்-ஐ விடுத்து வானங்களிலும் மற்றும் பூமியிலுமிருந்து உங்களுக்கு வழங்குகின்ற படைப்பாளர் எவரும் இருக்கின்றாரா? அவருடன் வேறு தெய்வம் இல்லை, எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?
[35:4] அவர்கள் உம்மை நம்பமறுத்தால், உமக்கு முன்னிருந்த தூதர்களும், நம்ப மறுக்கப் பட்டுள்ளனர். கடவுள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
[35:5] மனிதர்களே, கடவுள்-ன் வாக்குறுதி உண்மை யானதாகும்; ஆகையால், இந்தக் கீழான வாழ்வின் மூலம் கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். வெற்று மாயைகளினால் கடவுள்-இடமிருந்து விலகிச் சென்று விடாதீர்கள்.
[35:6] சாத்தான் உங்களுடைய விரோதியாவான், ஆகவே ஒரு விரோதியைப் போல அவனை நடத்துங்கள். நரகவாசிகளாக இருப்பதற்காக மட்டுமே அவன் தன் கட்சியினரை அழைக் கின்றான்.
[35:7] நம்பமறுப்பவர்கள் கடுமையானதொரு தண்டனை க்கு உள்ளாகிவிட்டனர், மேலும் நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனுக்கும் தகுதிபெற்று விட்டனர்.
