ஸூரா 64: பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 5:20
ஸூரா 64: பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
[64:1] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசுரிமையும் அவருக்கேயுரியது, மேலும் அனைத்துப் புகழும் அவருக்கேயுரியது, மேலும் அவர் சர்வ சக்தியுடையவர்.
[64:2] அவர்தான் உங்களைப் படைத்தவர், பின்னர் உங்களுக்கிடையில் நம்பமறுப்பவரும், நம்பிக்கை யாளரும் உள்ளனர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[64:3] வானங்கள் மற்றும் பூமியை குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே* அவர் படைத்தார், உங்களை வடிவமைத்தார், மேலும் மிகச் சரியாக வடிவமைத் தார், பின்னர் உங்களுடைய இறுதி விதி அவரிடமே உள்ளது.
[64:4] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார், மேலும் நீங்கள் மறைக் கின்ற ஒவ்வொன்றையும் மற்றும் நீங்கள் அறிவிக் கின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[64:5] கடந்த காலத்தில் நம்ப மறுத்து, பின்னர் தங்களுடைய தீர்மானங்களின் பின் விளைவு களை அனுபவித்தவர்களை நீங்கள் கவனித்திருக் கின்றீர்களா? வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள்.
[64:6] இது ஏனெனில் அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், “நம்மைப் போன்ற மனிதர்களையா நாம் பின்பற்ற வேண்டும்?” என்று கூறினார்கள். அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் திரும்பிச் சென்று விட்டனர். கடவுள்-க்கு அவர்கள் தேவை இல்லை. கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.
[64:7] நம்பமறுப்பவர்கள் தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்பட மாட்டோம் என்று உறுதியுடன் கூறுகின்றனர்! ஆம், உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள், மேலும் நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் நீங்கள் பொறுப்பாக்கப்படுவீர்கள். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.
