ஸூரா 57: இரும்பு — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 7:39
ஸூரா 57: இரும்பு
[57:1] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
[57:2] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. வாழ்வையும் மரணத்தை யும் அவரே கட்டுப்படுத்துகின்றார். அவர் சர்வ சக்தியுடையவர்.
[57:3] அவர்தான் முதன்மையானவர் மேலும் முடிவு மானவர். அவர்தான் மிகவும் வெளியிலிருப் பவர் மேலும் மிகவும் உள்ளிருப்பவர். அவர் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவர்.
[57:4] அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில்* படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். பூமிக்குள் நுழைகின்ற ஒவ்வொன்றையும், மேலும் அதிலிருந்து வெளியில் வரும் ஒவ்வொன்றையும், விண்ணிலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், மேலும் அதில் ஏறுகின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிவார். நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடன் இருக்கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராகக் கடவுள் இருக்கின்றார்.
[57:5] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. அனைத்து விஷயங்களும் கடவுள் - ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
[57:6] அவர் இரவைப் பகலுடன் ஒன்று சேர்க்கின்றார், மேலும் பகலை இரவுடன் ஒன்று சேர்க்கின்றார். ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்தவராக அவர் இருக்கின்றார்.
[57:7] கடவுள்-மீதும் மற்றும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், மேலும் அவர் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து வழங்குங்கள். உங்களில் நம்பிக்கை கொண்டு (தர்மம்) வழங்குபவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
