ஸூரா 25: சட்டப்புத்தகம் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 14:20
ஸூரா 25: சட்டப்புத்தகம்
[25:1] தன் அடியாருக்கு, அவர் முழு உலகிற்கும் ஓர் எச்சரிக்கை செய்பவராகப் பணியாற்றுவதற் காக, இந்தச் சட்டப்புத்தகத்தை வெளிப் படுத்திய அந்த ஒருவர், பாக்கியம் மிக்கவர்.
[25:2] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் உரிய ஒருவர். ஒருபோதும் அவர் ஒரு மகனைக் கொண்டிருக்கவில்லை, அன்றியும் ஆட்சியதிகாரத்தில் எந்தப் பங்குதாரர்களும் அவருக்கு இல்லை. அவர் ஒவ்வொன்றையும் மிகச் சரியான அளவில் படைத்தார்; ஒவ்வொன்றையும் அவர் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டார்.*
[25:3] இருப்பினும், எந்த ஒன்றையும் படைக்காத வற்றை - அவர்களே படைக்கப்பட்டவர்களாக உள்ளனர்-மேலும் தங்களுக்கே கூட தீமையோ அல்லது நன்மையோ செய்து கொள்ளச் சக்தியற்றவற்றை, அவருடன் தெய்வங்களாக அவர்கள் அமைத்துக் கொள்கின்றனர், அன்றி யும் அவர்கள், வாழ்வையோ அல்லது மரணத் தையோ அல்லது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு தலையோ கட்டுப்படுத்தும் எந்தச் சக்தியையும் பெற்றிருக்கவில்லை.
[25:4] நம்ப மறுப்பவர்கள், “இது மற்ற சில மனிதர்களின் உதவியுடன், அவர் உருவாக்கி கொண்ட ஓர் இட்டுக் கட்டலேயாகும்” என்று கூறினார்கள். அவர்கள் ஓர் இறை நிந்தனையையும் மேலும் ஒரு பொய்மையையும் கூறி விட்டனர்.
[25:5] அத்துடன் அவர்கள், “அவர் எழுதிக் கொண்ட கடந்த காலக் கட்டுக்கதைகள்; அவை அவருக்கு இரவும் பகலும் எடுத்துக் கூறப் பட்டன”* என்றும் கூறினார்கள்.
[25:6] “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியத்தை* அறிந்த ஒருவரிடமிருந்து இது வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.
[25:7] மேலும் அவர்கள் கூறினர், “இந்தத் தூதர் உணவு உட்கொண்டும் அங்காடிகளில் நடந்து கொண்டும் இருப்பது எப்படி? அவருடன் ஒரு பிரச்சாரகராகப் பணிபுரிய ஒரு வானவர் மட்டும் அவருடன் இறங்கி வர முடிந்தால்!”
