ஸூரா 69: மறுக்க இயலாதது — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 4:40
ஸூரா 69: மறுக்க இயலாதது
[69:1] மறுக்க இயலாத (நிகழ்வு).
[69:2] எத்தகையதொரு மறுக்க இயலாத (நிகழ்வு)!
[69:3] மெய்யாகவே அது மறுக்க இயலாதது.
[69:4] தமூது மற்றும் ஆது, அதிர்ச்சியூட்டுவதை நம்ப மறுத்தனர்.
[69:5] தமூதைப் பொறுத்தவரை, பேரழிவால் (அதிர்வால்) அவர்கள் அழிக்கப்பட்டனர்.
[69:6] ஆதைப் பொறுத்த வரை, விடாப்பிடியானதொரு, உக்கிரமான புயலால் அழிக்கப்பட்டனர்.
[69:7] ஏழு இரவுகளும், மேலும் எட்டுப் பகல்களும், உக்கிரமாக அவர்கள் மீது அவர் அதனைக் கட்டவிழ்த்து விட்டார். அழுகிப் போன பனைமரத் தண்டுகளைப் போல சுற்றிலும் வீசியெறியப்படுகின்றவர்களாக மக்களை நீர் கண்டிருப்பீர்.
