Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 8: போரில் கைப்பற்றிய பொருட்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 8, Spoils of War (Al-Anfãl)

YouTube · 16:58

ஸூரா 8: போரில் கைப்பற்றிய பொருட்கள்

[8:1] போரில் கைப்பற்றிய பொருட்கள் குறித்து அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள் “போரில் கைப்பற்றிய பொருட்கள் கடவுள்-க் கும் மேலும் தூதருக்கும் உரியதாகும்,” என்று கூறுவீராக. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவும், நன்னெறியாளர்களாக இருக்கும்படி ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்ளவும் வேண்டும், மேலும் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-க்கும் அவருடைய தூதருக் கும் கீழ்ப்படிய வேண்டும்.

[8:2] உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென் றால், கடவுள் என்று கூறப்படும் போது அவர் களுடைய இதயங்கள் நடுங்கிவிடும், மேலும் அவருடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும் போது, அவர்களுடைய விசுவாசம் வலுப்படும், மேலும் தங்கள் இரட்சகர் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வார்கள்.

[8:3] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய வாழ்வாதாரங்களிலிருந்துஅவர்கள் தானம் வழங்குவார்கள்.

[8:4] இத்தகையவர்கள் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்கள் தங்கள் இரட்சகரிடத்தில் உயர்ந்த அந்தஸ்தையும், இன்னும் மன்னிப்பையும், மேலும் ஒரு தாராள மான வாழ்வாதாரத்தையும் அடைவார்கள்.

[8:5] ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்று வதற்கு, உமது வீட்டை விட்டு நீர் வெளிக் கிளம்ப வேண்டும் என உம் இரட்சகர் நாடிய போது, சில நம்பிக்கையாளர்கள் தயக்கமுள்ள நம்பிக்கையாளர்கள் என்று இனங்காட்டப் பட்டார்கள்.

[8:6] அவர்களிடம் அனைத்தும் விளக்கப்பட்டுவிட்ட பின்னரும் சத்தியத்திற்கெதிராக அவர்கள் உம்மிடம் வாதாடினார்கள். நிச்சயமான மரணத்தின்பால் அவர்கள் செலுத்தப்படுவது போன்று அவர்கள் நடந்து கொண்டார்கள்.

[8:7] ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மீது உங்களுக்கு வெற்றியைக் கடவுள் வாக்களித்திருந்ததை நினைவு கூருங்கள், ஆனால் நீங்கள் அப் போதும் பலஹீனமான கூட்டத்தையே எதிர் கொள்ள விரும்பினீர்கள். கடவுள்-ன் திட்ட மோ, சத்தியத்தை தன் வார்த்தைகளால் நிலை நாட்டி, நம்ப மறுப்பவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருந்தது.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 8