ஸூரா 7: ஆன்மா தூய்மையடையும் இடம் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 43:58
ஸூரா 7: ஆன்மா தூய்மையடையும் இடம்
[7:1] அ.ல.ம.ஸ.*
[7:2] இவ்வேதம் உமக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது- உம்முடைய இதயத்தில் இது பற்றிய சந்தேகத்திற்கு நீர் இடமளிக்க வேண்டாம் - இதனைக் கொண்டு நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டும், மேலும் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நினைவூட்டல் வழங்கும் பொருட்டும்.
[7:3] உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையே நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்; அவருடன் எந்த இணைத் தெய்வங்களையும் பின்பற்ற வேண்டாம். அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[7:4] பல சமூகத்தை நாம் அழித்தோம், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்திலோ அல்லது முற்றிலும் விழித்திருந்த நேரத்திலோ, அவர்கள் நம்முடைய தண்டனைக்கு உள்ளானார்கள்.
[7:5] நம்முடைய தண்டனை அவர்களிடம் வந்தபோது அவர்களின் கூற்றெல்லாம், “உண்மையில், நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்” என்பதாகத்தான் இருந்தது.
[7:6] தூதுச் செய்தியைப் பெற்றவர்களை நாம் நிச்சயம் விசாரிப்போம், மேலும் தூதர்களையும் நாம் விசாரிப்போம்.
[7:7] நாம் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்போம், ஏனெனில் நாம் ஒரு போதும் கவனமில்லாமல் இருக்கவில்லை.
