ஸூரா 27: எறும்பு — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 19:20
ஸூரா 27: எறும்பு
[27:1] த.ஸீ.* (எழுத்துக்களாகிய) இவை இந்தக் குர்ஆனின் சான்றுகளாக அமைகின்றன; ஆழ்ந்ததோர் வேதம்.
[27:2] நம்பிக்கையாளர்களுக்கு, ஒரு வழிகாட்டி, மற்றும் நற்செய்தி ஆகும்.
[27:3] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் அவர்கள், மறுவுலகைக் குறித்து, முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.
[27:4] எவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் நாம் அழகானதாக ஆக்குகின்றோம். இவ்விதமாக, அவர்கள் பெருந்தவறுகளைத் தொடர்ந்து புரிகின்றனர்.
[27:5] மிக மோசமான தண்டனைக்குள்ளானவர்கள் இவர்கள் தான், மேலும் மறுவுலகில், மிகவும் மோசமான நஷ்டமடைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
[27:6] நிச்சயமாக, ஞானம் மிக்கவரும், எல்லாம் அறிந்தவருமான ஒருவரிடமிருந்து இந்தக் குர்ஆனை நீர் பெறுகின்றீர்.
[27:7] மோஸஸ் தன் குடும்பத்தாரிடம்,“நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன்; அதிலிருந்து உங்களுக்குச் செய்தியையோ, அல்லது உங்களு க்குக் கதகதப்பளிக்கும் ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு வருகின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
