ஸூரா 82: துண்டு துண்டாக நொறுங்குதல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 1:45
ஸூரா 82: துண்டு துண்டாக நொறுங்குதல்
[82:1] வானம் துண்டு துண்டாக நொறுங்கும் பொழுது.
[82:2] கோள்கள் சிதறடிக்கப்படுகின்றன.
[82:3] பெருங்கடல்கள் வெடிக்க வைக்கப்படுகின் றன.
[82:4] சமாதிகள் திறக்கப்படுகின்றன.
[82:5] ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணமானது எது, மேலும் அது பின்தங்கக் காரணமானது எது என்பதை கண்டு கொள்ளும்.
[82:6] மனிதனே, மிகுந்த கண்ணியத்திற்குரியவரான உன்னுடைய இரட்சகரிடமிருந்து உன்னைத் திசை திருப்பியது எது?
[82:7] உன்னைப் படைத்த, உன்னை வடிவமைத்த, மேலும் உன்னைப் பூரணப்படுத்திய அந்த ஒருவர்.
