ஸூரா 16: தேனீ — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 32:58
ஸூரா 16: தேனீ
[16:1] கடவுள்-ன் கட்டளை முன்னரே வெளியிடப் பட்டுவிட்டது (மேலும் ஒவ்வொன்றும் முன்னரே எழுதப்பட்டு விட்டது), எனவே அதனை விரைவு படுத்தாதீர்கள்*. அவர் துதிப்பிற்குரியவர்; அவர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத் தெய்வங்களை விட மிகவும் மேலானவர்.
[16:2] அவர் தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத் தோரிடம், தனது கட்டளைகளைக் கொண்ட வெளிப்பாடுகளுடன், வானவர்களைக் கீழே அனுப்புகின்றார்: “என்னுடன் வேறு தெய்வம் எதுவுமில்லை என நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்; நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும்.”
[16:3] வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அவர் படைத்துள்ளார். அவர் மிகவும் உயர்வானவர், அவர்கள் அமைத்துக் கொள்கின்ற எந்த இணைத் தெய்வங்களையும் விட மிகவும் மேலானவர்.
[16:4] அவர் மனிதனை மிகச்சிறிய ஒரு துளியி லிருந்து படைத்தார், பின்னர் அவன் ஒரு தீவிரமான எதிரியாக மாறிவிடுகின்றான்.
[16:5] மேலும் உங்களுக்குக் கதகதப்பை வழங்கு வதற்காகவும், மேலும் மற்ற பல பயன்களுக் காகவும், அவ்வாறே உணவிற்காகவும், கால் நடைகளை உங்களுக்காக அவர் படைத்தார்.
[16:6] உங்கள் ஓய்வின்போதும், மேலும் நீங்கள் பயணிக்கும் போதும், அவை உங்களுக்கு சொகுசையும் வழங்குகின்றன.
[16:7] மேலும் மிகுந்ததொரு சிரமத்துடனன்றி உங்களால் சென்று சேர முடியாத இடங்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக, உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.
