Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:2 — தேனீ

அவர் தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத் தோரிடம், தனது கட்டளைகளைக் கொண்ட வெளிப்பாடுகளுடன், வானவர்களைக் கீழே அனுப்புகின்றார்: “என்னுடன் வேறு தெய்வம் எதுவுமில்லை என நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்; நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும்.”

[16:1] கடவுள்-ன் கட்டளை முன்னரே வெளியிடப் பட்டுவிட்டது (மேலும் ஒவ்வொன்றும் முன்னரே எழுதப்பட்டு விட்டது), எனவே அதனை விரைவு படுத்தாதீர்கள்*. அவர் துதிப்பிற்குரியவர்; அவர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத் தெய்வங்களை விட மிகவும் மேலானவர்.

[16:3] வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அவர் படைத்துள்ளார். அவர் மிகவும் உயர்வானவர், அவர்கள் அமைத்துக் கொள்கின்ற எந்த இணைத் தெய்வங்களையும் விட மிகவும் மேலானவர்.