Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:111 — இஸ்ரவேலின் சந்ததியினர்

மேலும், “ புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, அவர் ஒருபோதும் ஒரு மகனைப் பெற்றெடுக்க வில்லை, அன்றி அவருடைய சாம்ராஜ்யத்தில் அவருக்குப் பங்குதாரர்களும் இல்லை, அன்றி பலஹீனம் காரணமான கூட்டணி எதுவும் அவருக்குத் தேவையுமில்லை,” என்று பிரகடனம் செய்வீராக, மேலும் விடாது அவரைப் பெருமைப் படுத்துவீராக.

[17:110] “கடவுள் என அவரை அழையுங்கள், அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்; எந்தப் பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும், அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை” என்று கூறுவீராக. உமது தொடர்புத் தொழுகைகளை(ஸலாத்) நீர் மிகவும் சப்தமாகவோ, அன்றி இரகசிய மாகவோ கூறவேண்டாம்; மிதமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக.