குர்ஆன் 17:4 — இஸ்ரவேலின் சந்ததியினர்
நாம் வேதத்தில் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் தெரிவித்தோம்: “நீங்கள் பூமியில், இருமுறை மிகப்பெரும் அக்கிரமம் செய்வீர்கள். ஆண வத்தின் உயர் உச்சங்களில் வீழ்ந்திடவேண்டும் என்று நீங்கள் விதிக்கப்பட்டுள்ளீர்கள்.
[17:3] அவர்கள் நோவாவோடு நாம் சுமந்து சென்றோரின் சந்ததியினர்; அவர் நன்றியுள்ள ஒரு அடியாராக இருந்தார்.
[17:5] “முதல் முறை நிகழும் பொழுது, மிகவும் பலம் வாய்ந்த நம்முடைய பணியாட்களை உங்களுக் கெதிராக நாம் அனுப்புவோம் , அவர்கள் உங்களுடைய வீடுகள் மீது படையெடுப்பார்கள். இது நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு முன்னறி விப்பாகும்.