Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:74 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

லோத்தைப் பொறுத்த வரை, அவருக்கு நாம் ஞானத்தையும், அறிவையும் அளித்தோம், மேலும் வெறுக்கத்தக்கவற்றைச் செயல்படுத்தி வந்த சமூகத்திடமிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம்; அவர்கள் மிகக் கெட்டவர்களாகவும், மேலும் பாவிகளாகவும் இருந்தனர்.

[21:73] நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழி நடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்னெறியான செயல்கள் செய்வது எப்படி என்பதையும், தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்)* கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். நமக்கு, அர்ப்பணித்துக் கொண்ட வணக்கசாலிகளாக அவர்கள் இருந்தனர்.

[21:75] நமது கருணைக்குள் நாம் அவரை அனுமதித்தோம், ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.