குர்ஆன் 22:29 — புனித யாத்திரை
அவர்கள் தங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்யவும், தங்களுடைய பிரமாணங்களை நிறைவேற்றவும், மேலும் பழமையான புனிதப் பள்ளியைத் தரிசிக்கவும் வேண்டும்.
[22:28] அவர்கள் வணிகப்பலன்களைத் தேடிக் கொள்ளலாம், மேலும் கால்நடைகளை அவர் களுக்கு வழங்கியமைக்காக குறிப்பிட்ட நாட்களின் போது கடவுள்-ன் பெயரை அவர் கள் நினைவு கூர வேண்டும். “அதிலிருந்து உண்ணுங்கள் மேலும் சோர்வடைந்தவர் களுக்கும் மற்றும் ஏழைகளுக்கும் உணவளி யுங்கள்.”
[22:30] கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை பயபக்தியோடு செய்வோர் தங்கள் இரட்சகரி டம் நல்லதொரு வெகுமதிக்குத் தகுதியாகி விட்டனர். குறிப்பிட்டு உங்களுக்கு தடுக்கப் பட்டவற்றைத் தவிர, அனைத்துக் கால்நடைகளும் உங்களுடைய உணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இணைத்தெய்வ வழிபாடு எனும் வெறுக்கதக்க செயலை தவிர்த்துக் கொள்ளவும், மேலும் பொய்சாட்சி கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.