Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:78 — புனித யாத்திரை

நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவருக்காக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹா மின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் துவக்கத்தில் உங்களுக்கு “ அடிபணிந்தோர்” எனப் பெயரிட்டார். இவ்விதமாக, தூதர் உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகப் பணியாற்றிட வேண்டும், மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாக பணியாற்றிட வேண்டும். ஆகையால், நீங்கள் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும், மேலும் கடவுள்-ஐப் பலமாகப் பற்றிக் கொள்ளவும் வேண்டும்; அவர்தான் உங்கள் இரட்சகர், மிகச்சிறந்த இரட்சகர், மேலும் மிகச்சிறந்த ஆதரவாளர்.

[22:77] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் வெற்றி யடையும் பொருட்டு, நீங்கள் குனியவும், சிரம் பணியவும், உங்கள் இரட்சகரை வழிபடவும், மேலும் நன்னெறிகள் புரியவும் வேண்டும்.