Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:39 — எறும்பு

ஜின்களில் இருந்து அஃப்ரீத் என்ற ஒன்று, “நீர் எழுந்து நிற்பதற்கு முன்னர் உம்மிடம் அதனைக் கொண்டு வர என்னால் இயலும். அதனைச் செய்யும் அளவிற்கு சக்தி நிறைந்தவனாக இருக்கின்றேன்” என்று கூறியது.

[27:38] அவர், “என் பிரதானிகளே, அடிபணிந்தவர்களாக இங்கே அவர்கள் வருவதற்கு முன்னர், அவளுடைய மாளிகையை என்னிடம் கொண்டு வர உங்களில் எவரால் இயலும்?” என்று கூறினார்.

[27:40] புத்தகத்திலிருந்து அறிவைப் பெற்றிருந்த ஒன்று, “உமது கண்ணிமைப்பதற்குள் அதனை உம்மிடம் கொண்டு வர என்னால் இயலும்” என்று கூறியது. அவருக்கு முன்னால் அது நிர்மாணிக்கப் பட்டிருப்பதை அவர் கண்டதும், அவர்,“இது என் இரட்சகரிடமிருந்து ஓர் அருட்கொடையாகும், நான் நன்றியுடையவனாக இருக்கின்றேனா அல்லது நன்றிகெட்டவனா என்று காட்டு வதற்காக, இதன் மூலம் அவர் என்னைச் சோதிக்கின்றார். எவரொருவர் நன்றியுடையவராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனிற்காகவே நன்றியுடையவராக இருக் கின்றார், மேலும் ஒருவன் நன்றிகெட்டவனாக மாறிவிட்டால், பின்னர் என்னுடைய இரட்சகர் அவன் பால் எந்தத் தேவையும் இல்லாதவர், மிக்க கண்ணிய முடையவர்” என்று கூறினார்.