குர்ஆன் 28:4 — சரித்திரம்
ஃபேரோ பூமியில் ஒரு கொடுங்கோலனாக ஆனான், மேலும் மக்களில் சிலருக்கெதிராக பாரபட்சம் செய்தான். அவர்களில் உள்ள உதவியற்ற ஒரு கூட்டத்தாரை, அவர்களுடைய மகன்களைக் கொன்று விட்டு, அதே சமயம் அவர்களுடைய மகள்களை உயிருடன் விட்டு வைத்து, கொடுமை செய்தான். அவன் உண்மையில் தீயவனாக இருந்தான்.
[28:3] நம்பிக்கை கொண்ட மக்களின் நலனிற்காக, மோஸஸ் மற்றும் ஃபேரோவின் சரித்திரத்தில் சிலவற்றை, சத்தியத்துடன் நாம் உமக்கு இதில் ஓதிக் காட்டுகின்றோம்.
[28:5] பூமியில் அடக்குமுறை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு செய்யவும், அவர்களைத் தலைவர்களாக ஆக்கவும், மேலும் அவர்களை வாரிசுகளாக்கவும் நாம் நாடினோம்.