குர்ஆன் 40:35 — மன்னிப்பவர்
எந்த அடிப்படையுமின்றி, கடவுள்-ன் வெளிப் பாடுகளுக்கு எதிராக அவர்கள் வாதிடு கின்றனர். இந்த தன்மை கடவுள் மற்றும் நம்பிக்கையாளர்களால் மிகவும் வெறுக்கப் படுவதாகும். கடவுள் இவ்விதமாக ஒவ்வொரு ஆணவம் கொண்ட கொடுங்கோலனின் இதயத்தையும் முத்திரையிட்டு விடுகின்றார்.
[40:34] அதற்கு முன்னர் ஜோஸஃப் தெளிவான வெளிப்பாடுகளுடன் உங்களிடம் வந்திருந் தார், ஆனால் நீங்கள் அவருடைய தூதுச் செய்தியைத் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். பின்னர், அவர் இறந்து விட்ட பொழுது நீங்கள், “அவருக்குப் பின்னர் வேறு எந்தத் தூதரையும் கடவுள் அனுப்பமாட்டார். (அவர் தான் இறுதித் தூதர்!)”** என்று கூறினீர்கள். கடவுள் இவ்விதமாக வரம்பு மீறுபவர்களையும், சந்தேகிப்பவர்களையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்.
[40:36] ஃபேரோ கூறினான், “ஹாமானே, நான் சென்றடைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு, உயர்ந்ததொரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக.