Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:51 — கலந்தாலோசித்தல்

உள்ளுணர்வின் மூலமாகவோ, அல்லது ஒரு தடுப்பிற்குப் பின் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி, அவர் மூலம் தான் நாடு கின்றதை வெளிப்படுத்துவதன் மூலமாகவோ தவிர கடவுள்-உடன் மனிதர் எவரும் தொடர்பு கொள்ள இயலாது. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், ஞானம் மிக்கவர்.

[42:50] அல்லது, அவர் ஆண்களையும் பெண்களையும் திருமணம் புரியச் செய்து, பின்னர் தான் நாடுகின்ற எவரையும் மலடாக ஆக்கி விடுகின்றார். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.

[42:52] இவ்விதமாக, நம்முடைய கட்டளைகளைப் பிரகடனம் செய்கின்ற ஒரு வெளிப்பாட்டினை உமக்கு நாம் உள்ளுணர்வின் மூலம் அளித் தோம். வேதம் அல்லது நம்பிக்கை பற்றி, நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். இருப்பினும், நம் அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கின்ற எவரையும் வழிநடத்துவதற்காக இதனை ஒரு வழிகாட்டியாக நாம் ஆக்கினோம். நிச்சயமாக, நேரானதொரு பாதையிலேயே நீர் வழிநடத்துகின்றீர்.