குர்ஆன் 47:3 — முஹம்ம
இது ஏனெனில், நம்ப மறுப்பவர்கள் பொய்மையைப் பின்பற்றுகின்றனர், அதே சமயம் நம்பிக்கை கொண்டவர்களோ தங்களுடைய இரட்சகரிட மிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றுகின்றனர். கடவுள் இவ்விதமாக மக்களுக்கு அவர்களது உதாரணங்களை எடுத்துரைக்கின்றார்.
[47:2] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான காரியங்களை புரிந்து, மேலும் முஹம்மதிற்கு இறக்கி அனுப்பப்பட்டதில் நம்பிக்கை கொள்கின்றனரோ - அது அவர் களுடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாகும் - அவர்களுடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்து விடுகின்றார், மேலும் மனத் திருப்தியைக் கொண்டு அவர்களை அருள்பாலிக்கின்றார்.
[47:4] நம்ப மறுப்பவர்களை நீங்கள் (போரில்) எதிர்கொண்டால், நீங்கள் கழுத்துக்களைத் தாக்கலாம். அவர்களை நீங்கள் கைதிகளாகப் பிடித்துக் கொண்டால், போர் முடியும் வரை, அவர்களை நீங்கள் விட்டுவைக்கலாம், அல்லது ஈடு பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கலாம். கடவுள் நாடியிருந்தால், போர் இன்றியே, அவர் உங்களுக்கு வெற்றியை வழங்கியிருக்க இயலும். ஆனால் இவ்விதமாக அவர் உங்களை ஒருவரைக் கொண்டு மற்றவரைச் சோதிக்கின்றார். கடவுள்-ன் நிமித்தம் கொல்லப்பட்டவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய தியாகத்தை அவர் ஒருபோதும் வீணாக்கி விட மாட்டார்.