குர்ஆன் 98:5 — சான்று
அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதெல்லாம், மார்க்கத்தைப் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவாறு, கடவுள்-ஐ வழிபடவேண்டும், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. பூரணமான மார்க்கம் இத்தகை யதேயாகும்.
[98:4] உண்மையில், வேதத்தைப் பெற்றவர்கள் சான்றானது அவர்களுக்குத் தரப்படுகின்ற வரையில் தர்க்கித்துக் கொள்ளவில்லை.
[98:6] வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத் தவர்களும், மற்றும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், ஜஹன்ன நெருப்பின் தண்ட னைக்கு என்றென்றும் உள்ளாகி விட்டனர். அவர்கள்தான் மோசமான படைப்பினங்கள் ஆவர்.