Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 4: பெண்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 4, Women (Al-Nesã´)

YouTube · 57:04

ஸூரா 4: பெண்கள்

[4:1] மனிதர்களே, உங்களுடைய இரட்சகரை கவனத்தில் கொள்ளுங்கள், அவர் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து படைத்தார், பின்னர் அதிலிருந்து அதன் துணையைப் படைத்தார், பின்னர் அவ்விருவரிலிருந்து, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தார். எவர் மீது நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்கின்றீர்களோ அந்த கடவுள்-ஐக் கண்ணியப்படுத்துங்கள், மேலும் பெற்றோர்களையும் கண்ணியப்படுத்துங்கள். கடவுள் உங்களை * கண்காணிப்பவராக இருக்கின்றார்.

[4:2] அநாதைகளுக்குரிய சொத்துக்களை அவர் களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும். நல்லவற்றிற்கு பதிலாக கெட்டவற்றை மாற்றிக் கொள்ளாதீர்கள்,மேலும் அவர்களுடைய சொத்துக்களை உங்களுடையதுடன் சேர்த்து செலவழித்து விடாதீர்கள். இது மிகப்பெரிய அநீதியாகும்.

[4:3] அநாதைகளுக்கு நலம் பயக்கும் என்று நீங்கள் எண்ணினால், அவர்களுடைய தாய்மார்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்-இருவரையோ, மூவரையோ அல்லது நால்வரையோ நீங்கள் மணந்து கொள்ளலாம். நியாயமில்லாதவராக ஆகிவிடுவோமோ என்று நீங்கள் அஞ்சினால் ஒருவரை மட்டும் கொண்டோ அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ளதைக் கொண்டோ நீங்கள் திருப்தி கொள்ளுங்கள். கூடுதலாக, இவ்விதமாக செய்து உங்களுக்கு ஏற்படக்கூடிய பணக் கஷ்டத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

[4:4] நீங்கள் பெண்களுக்கு அவர்களுக்கு தகுந்த வரதட்சணைகளை நியாயமாக கொடுக்க வேண்டும். அவர்கள் தாமாக விரும்பி எதையாவது விட்டுக் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். அது உங்களுக்கு உரிமையுடையதாகும்.

[4:5] கடவுள் உங்களை பாதுகாப்பாளர்களாக்கி ஒப்படைத்திருக்கின்ற அநாதைகளின் சொத்துக் களை அவர்கள் பக்குவமடைவதற்கு முன்பு கொடுத்து விடாதீர்கள். நீங்கள் அதிலிருந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், மேலும் அவர்களைக் கனிவுடன் நடத்துங்கள்.

[4:6] அநாதைகள் தக்க பருவம் அடைந்துவிட்டால் அவர்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். போதுமான பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டதை நீங்கள் கண்டறிந்த உடனே அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றை அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்பு விரைவாக, ஊதாரித்தனமாக செலவழித்து விடாதீர்கள். வசதி படைத்த பாதுகாவலர் கூலி எதையும் பெறக் கூடாது. ஆனால், ஏழையான பாதுகாவலர் நியாயமான கூலியைப் பெறலாம். அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுக்கும் போது நீங்கள் சாட்சியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கிடுபவராக கடவுள் போதுமானவர்.

[4:7] பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் ஆண்களுக்கு ஒரு பங்குண்டு. பெற்றோர்களும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் ஒரு பங்குண்டு. வாரிசுச் சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அல்லது அதிகமாக இருந்தாலும் சரி, நிச்சயமாக ஒரு பங்கு (பெண்கள் அடைந்தே தீர வேண்டும்).

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 4