Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 17: இஸ்ரவேலின் சந்ததியினர் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 17: The Children of Israel (Bani Israel)

YouTube · 26:39

ஸூரா 17: இஸ்ரவேலின் சந்ததியினர்

[17:1] நம்முடைய அத்தாட்சிகளில் சிலவற்றை அவருக்குக் காட்டுவதற்காக, அதன் சுற்றுப் புறங்களை நாம் அருள்பாலித்திருந்த, அந்தத் தொலைவிலுள்ள சிரம்பணியும் இடத்திற்கு* (மக்காவின்) புனித மஸ்ஜிதிலிருந்து இரவுப் பொழுதில் தன் அடியாரை (முஹம்மது) வரவழைத்த அவர் துதிப்பிற்குரியவர். அவர் செவியேற்பவர், பார்ப்பவர்.

[17:2] அதுபோலவே, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்காக அதனை: “நீங்கள் என்னுடன் எந்த இணைத் தெய்வத்தையும் ஒரு இரட்சகராகவோ மேலும் எஜமானராகவோ அமைத்துக் கொள்ள வேண்டாம்” என்கின்ற ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.

[17:3] அவர்கள் நோவாவோடு நாம் சுமந்து சென்றோரின் சந்ததியினர்; அவர் நன்றியுள்ள ஒரு அடியாராக இருந்தார்.

[17:4] நாம் வேதத்தில் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் தெரிவித்தோம்: “நீங்கள் பூமியில், இருமுறை மிகப்பெரும் அக்கிரமம் செய்வீர்கள். ஆண வத்தின் உயர் உச்சங்களில் வீழ்ந்திடவேண்டும் என்று நீங்கள் விதிக்கப்பட்டுள்ளீர்கள்.

[17:5] “முதல் முறை நிகழும் பொழுது, மிகவும் பலம் வாய்ந்த நம்முடைய பணியாட்களை உங்களுக் கெதிராக நாம் அனுப்புவோம் , அவர்கள் உங்களுடைய வீடுகள் மீது படையெடுப்பார்கள். இது நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு முன்னறி விப்பாகும்.

[17:6] “அதன்பின்னர், நாம் அவர்கள் மீது உங்களுக்கொரு வாய்ப்புத் தருவோம், மேலும் எராளமாக செல்வங்களையும் மற்றும் பிள்ளை களையும் நாம் வழங்குவோம்; நாம் உங்களுக்கு மேன்மையைத் தருவோம்.

[17:7] “நீங்கள் நன்னெறிகளை செய்தால், உங்கள் சொந்த நலனுக்கே நீங்கள் நன்னெறிகளை செய்து கொள்கின்றீர்கள், ஆனால் நீங்கள் தீமைகள் செய்தால் உங்களுடைய சொந்த கேட்டிற்காகத் தான் அவ்வாறு நீங்கள் செய்கின்றீர்கள். இவ்விதமாக, இரண்டாவது முறை நிகழ்ந்தேறும் பொழுது, அவர்கள் உங்களைத் தோற்கடிப்பார்கள், மேலும் முதல் முறை அவர்கள் செய்ததைப் போலவே, மஸ்ஜிதில் நுழைவார்கள். நீங்கள் சேகரித்த இலாபங்கள் அனைத்தையும் அவர்கள் துடைத்தெடுத்து விடுவார்கள்.”

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 17