Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 24: ஒளி — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 24: Light (Al-Noor)

YouTube · 18:20

ஸூரா 24: ஒளி

[24:1] நாம் இறக்கி அனுப்பிய, மேலும் நாம் சட்டமாக விதித்துள்ள ஒரு சூரா. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, தெளிவான வெளிப்பாடுகளை அதனில் நாம் வெளிப் படுத்தியுள்ளோம்.

[24:2] விபச்சாரம் செய்பவள் மற்றும் விபச்சாரம் செய்பவன் ஆகிய அவர்கள் ஒவ்வொரு வருக்கும் நீங்கள் நூறு சவுக்கடிகள் கொடுக்க வேண்டும். கடவுள் மீதும் மற்றும் இறுதி நாளின் மீதும் நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், கடவுள்-ன் சட்டத்தைச் செயல் படுத்துவதை விட்டும் அனுதாபத்தால் நீங்கள் ஊசலாடாதீர்கள். மேலும் நம்பிக்கை யாளர்களின் ஒருகூட்டம் அவர்களுடைய தண்டனையைக் காணட்டும்.*

[24:3] விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் செய்யும் ஒருத்தியையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருத்தியையோ திருமணம் செய் வதில் சென்று முடிவான், மேலும் விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்யும் ஒருவனையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருவனையோ திருமணம் செய்வதில் சென்று முடிவாள். இது நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.

[24:4] எவர்கள் திருமணமான பெண்கள் மீது விபச்சாரக் குற்றம்சாட்டிவிட்டு, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரத் தவறு கின்றனரோ, அவர்களுக்கு நீங்கள் எண்பது சவுக்கடிகள் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களிடமிருந்து எந்தச் சாட்சியத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது; அவர்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.

[24:5] அதன்பின்னர் அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொண்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[24:6] வேறு சாட்சிகள் எதுவுமின்றி, தங்களுடைய சொந்த வாழ்க்கைத் துணைகளைக் குற்றம் சாட்டுபவர்களைப் பொறுத்தவரை, அவர் உண்மையையே கூறுவதாக நான்கு முறை கடவுள் மீது சத்தியம் செய்தால், பின்னர் அந்தச் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

[24:7] ஐந்தாம் பிரமாணமானது, அவர் கூறுவது பொய்யாக இருந்தால், கடவுள்-ன் தண்டனை யானது அவர் மீதே உண்டாவதாக என்று இருத்தல் வேண்டும்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 24