Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 18: குகை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 18: The Cave (Al-Kahf)

YouTube · 24:58

ஸூரா 18: குகை

[18:1] இவ்வேதத்தைத் தன் அடியாருக்கு வெளிப் படுத்திய மேலும், குறைகளற்றதாக இதனை ஆக்கிய, கடவுள்-ஐப் புகழுங்கள்.

[18:2] அவரிடமிருந்து கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் தாராளமானதொரு வெகுமதியைச் சம்பாதித்து விட்டனர் என்ற நற்செய்தியை அறிவிப்பதற்காகவுமானதொரு, பரிபூரணமான (வேதம்) ஆகும்.

[18:3] அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப் பார்கள்.

[18:4] மேலும், “ஒரு மகனைக் கடவுள் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காக.

[18:5] இதைப் பற்றிய எந்த அறிவையும் அவர்களோ, அன்றி அவர்களுடைய பெற்றோர்களோ பெற்றிருக்கவில்லை.அவர்களுடைய வாய்களிலிருந்து எப்படிப்பட்டதோர் இறை நிந்தனை வெளிவருகின்றது! அவர்கள் கூறுவது மிகப்பெரியதொரு பொய்யாகும்.

[18:6] இந்த செய்திகளுக்கான அவர்களுடைய மறுமொழிக்காகவும் மேலும் இதில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பதற்காகவும், உம்மையே நீர் பழித்துக் கொள்ளக் கூடும்; நீர் துக்கமடையவும் கூடும்.

[18:7] அவர்களைச் சோதிப்பதற்காகவும், மேலும் இவ்விதமாக அவர்களில் நன்னெறியான காரியங்கள் செய்பவர்களைச் சிறப்பிப்பதற் காகவும், பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் நாம் அலங்காரமாக ஆக்கியுள்ளோம்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 18