Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 3: இம்ரானின் குடும்பத்தினர் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 3, the Amramites (Ãli-´Imrãn)

YouTube · 58:36

ஸூரா 3: இம்ரானின் குடும்பத்தினர்

[3:1] அ.ல.ம.*

[3:2] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஜீவித்திருப்பவர், நிலைத்திருப்பவர்.

[3:3] அவர், உமக்கு இவ்வேதத்தை சத்தியத் துடனும், முந்தைய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அனுப்பியுள் ளார், மேலும் அவர் தோரா மற்றும் சுவிஷேசத்தை அனுப்பினார்

[3:4] இதற்கு முன்பு மக்களை வழி நடத்துவதற்காக, மேலும் அவர் சட்டப்புத்தகத்தை அனுப்பினார். கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்ப வர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாகின் றார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.

[3:5] பூமியின் மீதோ, அல்லது வானத்திலோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.

[3:6] தான் நாடுகின்றபடி கருவறைகளில் உங்களை வடிவமைப்பவர் அவரே. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[3:7] அவர் உமக்கு நேரடியான வசனங்களும் - அவை இவ்வேதத்தின் சாரமாக விளங்குபவை - மற்றும் பல பொருள் தரும் அல்லது உவமான வசனங்களும் கொண்டதாக இவ்வேதத்தினை அனுப்பியுள்ளார். தங்கள் இதயங்களில் சந்தேகங்களை கொண்டவர்கள் குழப்பத் தைத் தோற்றுவிப்பதற்காகவும் மேலும் குறிப் பிட்டதோர் அர்த்தத்தை வெளிக்கொணர் வதற்காகவும் பலபொருள் தரும் வசனங்களைப் பின்பற்றுவார்கள். கடவுள்-ஐயும் அறிவில் நன்கு ஊ

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 3