Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 63: நயவஞ்சகர்க — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 63: The Hypocrites (Al-Munaafeqoon)

YouTube · 2:58

ஸூரா 63: நயவஞ்சகர்க

[63:1] நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் பொழுது அவர்கள், “நீர் கடவுள்-ன் தூதர்தான் என நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம்”* என்று கூறுகின்றனர். நீர் அவருடைய தூதராக இருக்கின்றீர் என்பதைக் கடவுள் அறிவார், மேலும் இந்நயவஞ்சகர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர் என்று கடவுள் சாட்சியம் கூறுகின்றார்.

[63:2] வெளிப்படையான தங்களுடைய விசுவாசம் எனும் வெளிவேஷத்தின் கீழ், அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து மக்களை விரட்டு கின்றனர். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானதாகும்.

[63:3] இது ஏனெனில், அவர்கள் நம்பிக்கை கொண் டனர், பின்னர் நம்ப மறுத்து விட்டனர். ஆகையால், அவர்களுடைய மனங்கள் தடுக்கப்பட்டு விட்டன; அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

[63:4] அவர்களை நீர் காணும் பொழுது, அவர்களுடைய தோற்றங்களால் நீர் கவரப்படக் கூடும். மேலும் அவர்கள் பேசும் பொழுது, அவர்களுடைய சொல்வன்மையை நீர் கவனத்துடன் செவியேற்கக் கூடும். அவர்கள் நிற்கின்ற மரக் கட்டைகளைப் போன்றவர்கள். ஒவ்வொரு அழைப்பும் அவர்க ளுக்கு எதிரான நோக்கத்தில் உள்ளதென்றே அவர்கள் நினைக்கின்றனர். இவர்கள்தான் மெய்யான விரோதிகள் ஆவர்; அவர்களைக் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பீராக. கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார்; அவர்கள் விலகிச் சென்று விட்டனர்.

[63:5] “வாருங்கள், கடவுள்-ன் தூதர் உங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்ய ட்டும்”, என அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் பரிகாசமாகத் தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர், மேலும் அவர்கள் மற்றவர்களை விரட்டுவதையும் மேலும் ஆணவத்துடன் நடந்து கொள்வதையும் நீர் காண்பீர்.

[63:6] அவர்களுடைய பாவமன்னிப்பிற்காக நீர் பிரார்த்தித்தாலும், அல்லது அவர்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்திக்கா விட்டாலும், அவர்களுக்கு அது சமமேயாகும்; கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.

[63:7] “கடவுள்-ன் தூதரைப் பின்பற்றியவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்காதீர்கள், ஒரு வேளை அவர்கள் அவரைக் கைவிட்டு விடக்கூடும்!,” என்று கூறுபவர்கள் தான் அவர்கள். ஆயினும், வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்களைக் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார், ஆனால் இந்நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 63