Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 72: ஜின்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 72: Jinns (Al-Jinn)

YouTube · 4:20

ஸூரா 72: ஜின்கள்

[72:1] கூறுவீராக, “எனக்கு உள்ளுணர்வு அளிக்கப் பட்டது. ஜின்களில் ஒரு கூட்டத்தார் கவனத்துடன் செவியேற்றனர், பின்னர் கூறினர், ‘நாங்கள் ஓர் அற்புதமான குர்ஆனை செவியேற்றோம்.*

[72:2] “ ‘அது நன்னெறியின் பால் வழிநடத்துகின்றது, மேலும் நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டு விட்டோம்; எங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் வேறு எதனையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டோம்.

[72:3] “ ‘நம்முடைய ஒரே இரட்சகர் மிகவும் உயர் வானவர் ஆவார். அவர் ஒரு ஜோடியையோ, அன்றி ஒரு மகனையோ ஒருபோதும் கொண்டி ருந்ததில்லை.

[72:4] “ ‘நமக்கிடையில் மூடர்கள் தான் கடவுள்-ஐப் பற்றி இத்தகைய பொருத்தம் அற்றவற்றைக் கூறிக் கொண்டிருந்தனர்.

[72:5] “ ‘மனிதர்களோ, அன்றி ஜின்களோ கடவுள்-ஐப் பற்றிப் பொய்களைக் கூறுதல் சாத்தியமல்ல என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

[72:6] “ ‘மனித இனத்தினர் ஜின் இனத்தினர் மூலம் ஆற்றலைத் தேடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஏராளமானதொரு கஷ்டத்தைக் கொண்டு மட்டுமே அவர்களை வருத்தினர்.

[72:7] “ ‘கடவுள் மற்றொரு (தூதரை) அனுப்ப மாட்டார் என்று நீங்கள் நினைத்ததைப் போலவே, அவர்களும் நினைத்தனர்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 72