Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 13: இடியோசை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 13: Thunder (Al-Ra`Ad)

YouTube · 13:58

ஸூரா 13: இடியோசை

[13:1] அ.ல.ம.ர.* (எழுத்துக்களான) இவை இந்த வேதத்தின் சான்றுகளாகும். உமது இரட்சகரிட மிருந்து உமக்கு என்ன இறக்கப்பட்டுள்ளதோ அதுவே சத்தியமாகும், ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

[13:2] கடவுள் தான் நீங்கள் காணக்கூடிய வானங் களை தூண்கள் எதுவுமின்றி உயர்த்தியவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். சூரியன் மற்றும் சந்திரன் ஒவ்வொன்றையும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதொரு காலத்திற்கு (அவற்றின் வட்ட வரைக்குள்) ஓடும்படி அவர் ஆக்கினார். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்து கின்றார், மேலும் உங்கள் இரட்சகரைச் சந்திப்பது குறித்து நீங்கள் உறுதிப்பாட்டை அடையும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை விவரிக்கின்றார்.

[13:3] அவர்தான் பூமியை நிர்மாணித்து, மேலும் அதன் மேல் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவர். மேலும் வெவ்வேறுபட்ட கனி வர்க்கங்களிலிருந்து, அவர் அவற்றை ஜோடி களாக-ஆணினம் மற்றும் பெண்ணினம் என ஆக்கினார். இரவு பகலை முந்துகின்றது. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.

[13:4] பூமியின் மீது திராட்சைப் பழத்தோட்டங் களையும், பயிர்களையும், பேரீத்த மரங்களை யும்-கொட்டைகள் கொண்டவை மற்றும் கொட்டைகள் இல்லாதவைகளை- விளைவிக்கும் நிலங்கள் அருகருகே உள்ளன. அவை ஒரே தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்யப்பட்ட போதிலும், உண்ணுவதற்கு அவற்றில் சிலவற்றை நாம் மற்றவைகளை விட மேலாக தேர்ந்தெடுத்திருக்கின்றோம். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.

[13:5] எதற்காகவாவது நீர் வியப்படைவீராயின், உண்மையான வியப்பு அவர்கள்: “நாம் தூசி யாக மாறிய பின்னர், நாம் புதிதாக மீண்டும் படைக்கப்படுவோமா?” என்று கூறுவதுதான். இவர்கள் தான் தங்கள் இரட்சகரை நம்ப மறுத்தவர்கள். இவர்கள் தான் தங்கள் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளுக்கு உள்ளானவர்கள். இவர்கள்தான் நரகிற்கு உள்ளானவர்கள், அங்கே அவர்கள் நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.

[13:6] நன்னெறியாளர்களாக மாறிவிடுவதற்குப் பதிலாக, தங்கள் மீது அழிவைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடு கின்றனர்! கடந்த காலங்களில் போதுமான முன்னு தாரணங்கள் அவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில், உம்முடைய இரட்சகர் மனிதர்களுடைய வரம்பு மீறல்கள் இருந்த போதிலும், அவர்கள் பால் முற்றிலும் மன்னிப்பு கொண்டவராக உள்ளார், மேலும் உமது இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதிலும் கண்டிப்பானவர்.

[13:7] நம்ப மறுத்தோர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (அப்போது நாங்கள் நம்பிகை கொள் வோம்)” என்று கூறுகின்றார்கள். நீர் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே-ஒவ்வொரு சமூகமும் வழிகாட்டும் ஓர் ஆசிரியரைப் பெற்றுக் கொள்கின்றது.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 13