ஸூரா 9: இறுதியான எச்சரிக்கை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 35:58
ஸூரா 9: இறுதியான எச்சரிக்கை
[9:1] உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளும் இணைத் தெய்வ வழிபாடு செய் வோருக்கு, கடவுள் மற்றும் அவருடைய தூதரிடமிருந்து, இதில் ஓர் இறுதியான எச்சரிக்கை வெளியிடப்படுகின்றது.
[9:2] ஆகையால், நான்கு மாதங்களுக்குப் பூமியில் சுதந்திரமாகச் சுற்றுங்கள், மேலும் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதையும், நம்ப மறுப்பவர்களைக் கடவுள் இழிவுபடுத்துகின்றார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
[9:3] கடவுள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர் களைக் கைவிட்டு விட்டார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்தார், என்று புனித யாத்திரையின் மகத்தான நாளில் கடவுள் இடமிருந்தும் அவருடைய தூதரிடமிருந்தும் மக்கள் அனைவருக்கும் ஒரு பிரகடனம் இதிலே வெளியிடப்படுகின்றது. இனி நீங்கள் வருந்தித் திருந்தினால், அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்ப மறுப்போருக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.
[9:4] இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் உங்களுடன் ஓர் உடன்படிக்கையில் கையொப்ப மிட்டு அதனை மீறாமலும், அன்றி உங்களுக் கெதிராக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்ளாமலும் இருந்தால், அவர்களுடனான உங்கள் உடன்படிக்கையை காலாவதியாகும் நாள் வரை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.
[9:5] புனித மாதங்கள் கடந்த உடன், (அவர்கள் சமா தானம் செய்து கொள்ள மறுத்தால்) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களை நீங்கள் போரில் எதிர் கொள்ளும்போது நீங்கள் அவர்களைக் கொல்லலாம், அவர்களைத் தண்டிக்கலாம், மேலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தடுக்கலாம். அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்தால், அவர்களைச் செல்ல நீங்கள் விட்டு விட வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:6] இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களில் ஒருவர் உங்களோடு பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை தேடினால், அவருக்கு நீங்கள் பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை வழங்க வேண்டும், இவ்விதமாக அவர் கடவுள்-ன் வார்த்தையைச் செவியேற்க இயலும், பின்னர் அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு அவரை அனுப்பி விடுங்கள். இது ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக இருக்கின்றனர்.
[9:7] கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் எந்த வாக்குறுதியையும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் எப்படிக் கேட்க இயலும்? புனித மஸ்ஜிதில் உங்களோடு ஒரு சமாதான உடன் படிக்கையில் கையொப்பமிட்டவர்கள் விதி விலக்காவார்கள். இத்தகையதொரு உடன் படிக்கையை அவர்கள் மதித்து மேலும் அதனை உறுதியாகக் கடைப்பிடித்தால், நீங்களும் அவ்வாறே உறுதியாக கடைப் பிடிக்க வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.
