Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 95: அத்தி — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 95: The Fig (Al-Teen)

YouTube · 0:44

ஸூரா 95: அத்தி

[95:1] அத்தி மற்றும் ஒலிவத்தின் மீது சத்தியமாக.

[95:2] சினாய் மலை.

[95:3] மேலும் கண்ணியப்படுத்தப்பட்ட இந்த (மக்கா)* நகரம்.

[95:4] மிகச் சிறந்த வடிவில் மனிதனை நாம் படைத்தோம்.

[95:5] பின்னர் அவனைக் கீழினும் கீழானவனாக மாற்றினோம்.

[95:6] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைத் தவிர; நன்கு தகுதியானதொரு வெகுமதியை அவர்கள் பெறுகின்றனர்.

[95:7] இன்னும் ஏன் நீங்கள் விசுவாசத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 95