Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 20: தா.ஹா. — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 20: T.H. (Ta Ha)

YouTube · 21:39

ஸூரா 20: தா.ஹா.

[20:1] த.ஹ.*

[20:2] எந்தக் கஷ்டத்தையும் உமக்கு உண்டாக்கு வதற்காக, இந்தக் குர்ஆனை உமக்கு நாம் வெளிப்படுத்தவில்லை.

[20:3] பயபக்தியுடையவர்களை எச்சரிப்பதற்காக மட்டுமே.

[20:4] பூமியையும் மற்றும் உயர்ந்த வானங்களையும் படைத்தவரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.

[20:5] மிக்க அருளாளர்; அவர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக் கொண்டார்.

[20:6] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் மண்ணிற்கு அடியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக் குரியவை.

[20:7] உங்களுடைய நம்பிக்கை உறுதியை நீங்கள் பகிரங்கப்படுத்துகின்றீர்களோ (அல்லது இல்லையோ) அவர் இரகசியங்களையும், அதனையும் விட மிகவும் மறைவானவற்றையும் அறிகின்றார்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 20