Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 6: கால்நடை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 6, Livestock (Al-an`Ãm)

YouTube · 44:13

ஸூரா 6: கால்நடை

[6:1] புகழ் அனைத்தும், வானங்கள் மற்றும் பூமியை படைத்தவரும், மேலும் இருளையும், ஒளியை யும் உண்டாக்கியவருமான கடவுள்-க்கே உரியது. இருப்பினும் தங்களுடைய இரட் சகரை நம்ப மறுப்பவர்கள் தொடர்ந்து விலகிச் செல்கின்றனர்.

[6:2] அவர்தான், உங்களை களிமண்ணில் இருந்து படைத்து பின்னர் உங்கள் ஆயுட்காலத்தை முன்னரே நிர்ணயித்தார், அந்த ஆயுட்காலம் அவருக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் நீங்கள் தொடர்ந்து சந்தேகப்படுகின்றீர்கள்.

[6:3] வானங்கள் மற்றும் பூமியில் அவர்தான் ஒரே கடவுள். உங்களுடைய இரகசியங்களையும், உங்கள் பிரகடனங்களையும் அவர் அறிகின் றார், மேலும் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார்.

[6:4] அவர்களுக்கு, எந்தவிதமான சான்று அவர்களுடைய இரட்சகரிடமிருந்து வந்தாலும் ஒரு பொருட்டல்ல, அதைவிட்டும் அவர்கள் வெறுப்பில் திரும்பி விடுகின்றார்கள்.

[6:5] சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் அதைப் புறக்கணித்ததனால், அவர்களுடைய கவனமின்மையின் விளைவுகளுக்கு, அவர்கள் உள்ளானார்கள்.

[6:6] அவர்களுக்கு முன்பு, எத்தனை தலை முறையினரை நாம் அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? உங்களுக்கு செய்ததை விட அதிகமாக அவர்களுக்குச் செய்து, பூமியில் நாம் அவர்களை நிலைப்படுத்தினோம், மேலும் நாம் அருட்கொடைகளை அவர்கள் மீது தாராளமாகப் பொழிந்தோம். மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளை அவர்களுக்குக் கொடுத்தோம். அதன்பின்னர் அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களை அழித்தோம், மேலும் அவர் களுடைய இடத்தில் வேறு தலைமுறையினரை அவர்களுக்குப் பதிலாக நாம் அமர்த்தினோம்.

[6:7] நாம் அவர்களுக்குக் கண்களால் காணக் கூடிய, காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை இறக்கி அனுப்பியிருந்தாலும், மேலும் அதை அவர்கள் தங்களுடைய கரங்களால் தொட்டு உணர்ந்தாலும், நம்பமறுத்தவர்கள் “இது திறமையான மாயாஜாலமே தவிர வேறில்லை” என்று கூறியிருப்பார்கள்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 6