Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 98: சான்று — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 98: Proof (Al-Bayyinah)

YouTube · 1:39

ஸூரா 98: சான்று

[98:1] வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத்த வர்களும், அவ்வண்ணமே இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், சான்று அவர்க ளுக்குத் தரப்பட்டிருந்த போதிலும், தங்க ளுடைய வழிகளையே வலியுறுத்துகின்றனர் .*

[98:2] கடவுள்-இடமிருந்து ஒரு தூதர், புனிதமான போதனைகளை அவர்களுக்கு ஓதிக்காட்டு கின்றார்.*

[98:3] அவற்றில் மதிப்புமிக்க படிப்பினைகள் உள்ளன.

[98:4] உண்மையில், வேதத்தைப் பெற்றவர்கள் சான்றானது அவர்களுக்குத் தரப்படுகின்ற வரையில் தர்க்கித்துக் கொள்ளவில்லை.

[98:5] அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதெல்லாம், மார்க்கத்தைப் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவாறு, கடவுள்-ஐ வழிபடவேண்டும், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. பூரணமான மார்க்கம் இத்தகை யதேயாகும்.

[98:6] வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத் தவர்களும், மற்றும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், ஜஹன்ன நெருப்பின் தண்ட னைக்கு என்றென்றும் உள்ளாகி விட்டனர். அவர்கள்தான் மோசமான படைப்பினங்கள் ஆவர்.

[98:7] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தியவர்கள்தான் மிகச் சிறந்த படைப்பினங்கள் ஆவர்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 98