Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 23: நம்பிக்கையாளர்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 23: The Believers (Al-Mu'minun)

YouTube · 19:01

ஸூரா 23: நம்பிக்கையாளர்கள்

[23:1] நம்பிக்கையாளர்களே உண்மையில் வெற்றி யாளர்கள்;

[23:2] தங்களுடைய தொடர்புத் தொழுகைகளின் (ஸலாத்) போது பயபக்தியோடிருப்பவர்கள்.

[23:3] மேலும் அவர்கள் வீண்பேச்சைத் தவிர்த்துக் கொள்வார்கள்.

[23:4] மேலும் அவர்கள் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பார்கள்.

[23:5] மேலும் அவர்கள் தங்களுடைய கற்பைப் பாதுகாப்பார்கள்.

[23:6] அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக ளுடன், அல்லது சட்டபூர்வமாக அவர்களுக் குரியவர்களுடன் மட்டும், பாலியல் உறவு கொள்வார்கள்; அவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களாக ஆக மாட்டார்கள்.

[23:7] இந்த எல்லைகளை மீறுபவர்களே வரம்பு மீறியவர்கள்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 23