ஸூரா 36: ய.ஸீ. — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 13:20
ஸூரா 36: ய.ஸீ.
[36:1] ய.ஸீ.*
[36:2] மேலும் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன்.
[36:3] மிகவும் நிச்சயமாக, நீர் (ரஷாத்)* தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்.
[36:4] நேரானதொரு பாதையின் மீது.
[36:5] இந்த வெளிப்பாடு சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடமிருந்து வந்துள்ளது.
[36:6] எவர்களுடைய பெற்றோர்கள் ஒருபோதும் எச்சரிக்கப்படாதிருந்தனரோ அந்த மக்களை எச்சரிப்பதற்காக, ஆகையால், அவர்கள் அறியா தவர்களாக இருக்கின்றனர்.
[36:7] அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
