ஸூரா 38: ஸ — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 13:20
ஸூரா 38: ஸ
[38:1] ஸ. (ஸாத்)*, மேலும் சான்றைக் கொண்டிருக் கின்ற இந்தக் குர்ஆன்.**
[38:2] நம்பமறுப்பவர்கள் ஆணவத்திலும் மற்றும் எதிர்ப்பிலும் மூழ்கி விட்டனர்.
[38:3] அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் உதவிக்கு அழைத்தனர்; வீணானது.
[38:4] அவர்களிலிருந்தே, ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வருவது கண்டு அவர்கள் வியப்படைந்தனர். நம்பமறுப்பவர்கள் கூறினார்கள், “ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்.
[38:5] “தெய்வங்களையெல்லாம் ஒரே தெய்வமாக அவர் ஆக்கிவிட்டாரா? இது மெய்யாகவே ஆச்சர்யமாக இருக்கின்றது.”
[38:6] அந்தத் தலைவர்கள் அறிவித்தனர், “சென்று உங்களுடைய தெய்வங்களை வழிபடுவதில் உறுதியோடு விடாமுயற்சியுடனிருங்கள். இதுவே விரும்பத்தக்கதாகும்.
[38:7] “நம்முடைய பெற்றோர்களின் மார்க்கத்தி லிருந்து இதனைப்பற்றி நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இது ஒரு பொய்யே யாகும்.
