குர்ஆன் 10:109 — ஜோனா
உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றைப் பின்பற்று வீராக, மேலும் கடவுள் தனது தீர்ப்பை வெளி யிடும் வரை பொறுமையோடு இருப்பீராக; அவரே மிகச் சிறந்த நீதிபதி.
[10:108] “மனிதர்களே, இதில் உங்கள் இரட்சகரிட மிருந்து சத்தியம் உங்களுக்கு வந்துள்ளது. வழிகாட்டப்பட்டவர் எவராயினும், அவர் தன்னு டைய சொந்த நலனிற்காகவே வழிகாட்டப் படுகின்றார். மேலும் வழிதவறிச் செல்பவர் எவராயினும் அவர் தன்னுடைய சொந்த கேட்டிற் காகவே வழிதவறிச் செல்கின்றார். நான் உங்கள் மீது ஒரு பாதுகாவலர் அல்ல” என்று பிரகடனம் செய்வீராக.