Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:11 — ஜோனா

மனிதர்கள் உள்ளாகியிருக்கும் தண்டனையை, வாழ்வாதாரங்களை அவர்கள் கேட்கும் விதத்தைப் போல, கடவுள் துரிதப்படுத்தியிருப்பாராயின் நெடுங்காலத்திற்கு முன்னரே அவர்கள் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்களை, அவர்களுடைய வரம்பு மீறல்களில், குருட்டுத் தனமாகத் தவறுகள் செய்யும்படி நாம் விட்டு விடுகின்றோம்.

[10:10] அங்கே அவர்களுடைய பிரார்த்தனையானது: “எங்கள் தெய்வமே, நீரே துதிப்பிற்குரியவர்”, அங்கே அவர்களுடைய வாழ்த்தானது, “அமைதி”, மேலும் அவர்களுடைய முடிவான பிரார்த்தனையானது: “பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்பதாக இருக்கும்.

[10:12] துன்பம் மனிதனைத் தீண்டும் போது, அவன் படுத்த வண்ணமோ, அமர்ந்த வண்ணமோ, நின்ற வண்ணமோ நம்மிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான். ஆனால் நாம் அவனு டைய துன்பத்தை நிவர்த்தி செய்தவுடன், எந்தக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்யும்படி நம்மிடம் ஒருபோதும் இறைஞ்சிப் பிரார்த்திக் காதவன் போல அவன் சென்று விடுகின்றான்! வரம்பு மீறுபவர்களின் செயல்கள், இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன.