குர்ஆன் 10:17 — ஜோனா
கடவுள்-ஐப்பற்றிப் பொய்களை இட்டுக்கட்டும் ஒருவனை விட, அல்லது அவருடைய வெளிப் பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவனை விடப் பெரிய பாவி யார்? மிக உறுதியாக, வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.
[10:16] “கடவுள் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக்காட்டியிருக்க மாட்டேன், அன்றியும், இது குறித்து எதனையும் நீங்கள் அறிந்திருக்கவும் மாட்டீர்கள். இதற்கு முன்னர், ஒரு முழுமையான வாழ்வை உங்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கின்றேன் (மேலும் நீங்கள் என்னை புத்தியுள்ள, உண்மையான ஒரு மனிதனாக அறிந்திருக்கின்றீர்கள்). நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?” என்று கூறுவீ ராக.
[10:18] கடவுள்-உடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள், “இவர்கள் கடவுள்-இடம் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள்!” என்று கூறுகின்றார்கள். “வானங்களிலோ அல்லது பூமியிலோ, கடவுள் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா?”என்று கூறுவீராக. அவர் துதிப்பிற்குரியவர். பங்குதாரர்கள் தேவைப் படுவதை விட்டும், அவர் மிகவும் உயர்வானவர்.