குர்ஆன் 10:30 — ஜோனா
அப்போது தான் ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த ஒவ்வொன்றையும் குறித்துப் பரிசீலித்துப் பார்க்கும். மேலும் அவர்களுடைய உரிமையுள்ள இரட்சகரும், எஜமானருமான, கடவுள்-இடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள், மேலும் அவர்கள் பொய்யாக உருவாக்கிய இணைத்தெய்வங்கள் அவர் களைக் கைவிட்டு விடுவார்கள்.
[10:29] “எங்களை நீங்கள் வழிபட்டுக் கொண்டி ருந்ததைப் பற்றி நாங்கள் முற்றிலும் அறியாதவர்களாக இருந்தோம் என்பதற்கு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சாட்சியாக இருக்கக் கடவுள் போதுமானவர்.”
[10:31] “வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்? செவிப்புலன் மற்றும் பார்வைப் புலன் அனைத்தையும் கட்டுப்படுத்து பவர் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ள வற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் வெளிக்கொண்டு வருபவர் யார்? அனைத்து விஷயங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் யார்?”என்று கூறுவீராக. அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “பின்னர் நீங்கள் ஏன் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை?” என்று கூறுவீராக.