குர்ஆன் 10:29 — ஜோனா
“எங்களை நீங்கள் வழிபட்டுக் கொண்டி ருந்ததைப் பற்றி நாங்கள் முற்றிலும் அறியாதவர்களாக இருந்தோம் என்பதற்கு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சாட்சியாக இருக்கக் கடவுள் போதுமானவர்.”
[10:28] அவர்கள் அனைவரையும் நாம் ஒன்றுகூட்டும் அந்நாளில், இணைத்தெய்வங்களை வழி பட்டவர்களிடம் நாம், “உங்கள் இணைத் தெய்வங்களுடன் சேர்த்து, உங்களை நாம் வரவழைத்திருக்கின்றோம்” என்று கூறுவோம். அவர்கள் ஒருவருக்கொருவரை எதிரெதிராக நாம் நிறுத்துவோம், மேலும் அவர்களுடைய இணைத் தெய்வங்கள் அவர்களிடம் கூறுவார்கள், “நீங்கள் எங்களை இணைத்தெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்தது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
[10:30] அப்போது தான் ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த ஒவ்வொன்றையும் குறித்துப் பரிசீலித்துப் பார்க்கும். மேலும் அவர்களுடைய உரிமையுள்ள இரட்சகரும், எஜமானருமான, கடவுள்-இடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள், மேலும் அவர்கள் பொய்யாக உருவாக்கிய இணைத்தெய்வங்கள் அவர் களைக் கைவிட்டு விடுவார்கள்.