குர்ஆன் 10:28 — ஜோனா
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்றுகூட்டும் அந்நாளில், இணைத்தெய்வங்களை வழி பட்டவர்களிடம் நாம், “உங்கள் இணைத் தெய்வங்களுடன் சேர்த்து, உங்களை நாம் வரவழைத்திருக்கின்றோம்” என்று கூறுவோம். அவர்கள் ஒருவருக்கொருவரை எதிரெதிராக நாம் நிறுத்துவோம், மேலும் அவர்களுடைய இணைத் தெய்வங்கள் அவர்களிடம் கூறுவார்கள், “நீங்கள் எங்களை இணைத்தெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்தது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
[10:27] பாவங்களைச் சம்பாதித்தவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய பிரதிபலன் அவர்களு டைய பாவங்களுக்குச் சரி சமமானதேயாகும். இழிவுதான் அவர்களுடைய பங்கு, மேலும் கடவுள்-ஐ அன்றி எவர் ஒருவராலும் அவர்களைக் காப்பாற்ற இயலாது. இருண்ட இரவின் இருள்குவியல்களால் அழுத்தப்பட்ட வையாக அவர்களுடைய முகங்கள் காணப் படும். அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.
[10:29] “எங்களை நீங்கள் வழிபட்டுக் கொண்டி ருந்ததைப் பற்றி நாங்கள் முற்றிலும் அறியாதவர்களாக இருந்தோம் என்பதற்கு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சாட்சியாக இருக்கக் கடவுள் போதுமானவர்.”